தனிமையின் தூறல்

இனிமையாய் பேசியும்
எதிரியாய் பார்கின்றது
என் உள்ளம் என்னை

கடல் கடந்து போன
காற்றாடியாய்
மனம் தளர்ந்து
போகின்றது என் தனிமையாய்

காரணம் இன்றி
கதை இல்லை
நீ இன்றி என்
தனிமை நிழல்களில்
வருடியது உன்
நினைவின் உணர்வுகளை

சுமந்து திரிந்த
கனவுகளை அறுந்து
கிடக்கும் கயீறாய்
வீசிவிட்டாய்
என்னை
சிதைந்து கொண்டு
எரிகின்றது என்
காதலின் கண்மை

என் காதலின்
கண்ணீர் துளிகள்
என் கல்லறையின்
காவியச் சுவடுகள்

கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (25-Nov-15, 6:25 am)
Tanglish : thanimaiyin thooral
பார்வை : 140

மேலே