தெரியாத குறை

ஒரே ஒரு நாள் ..
ஓசி சிகரெட் தரமாட்டேன்
என்று நான் மறுத்ததற்கு
நான் புகை பிடிப்பதை
என் அம்மாவிடம்
போட்டுக் கொடுத்த
பக்கத்து அறை நண்பனின்
பேண்ட் ஒன்றை
பிளேடு கொண்டு கிழித்து
வைத்தேன்..
அதற்கும் நான் அவனுக்கு
மறுநாளே டிபன்
வாங்கிக் கொடுத்ததற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை ..
என்னுடைய இந்த நேர்மைதான்
எனக்கு ..
என்னிடத்தில் பிடித்தது ..!

எழுதியவர் : பாலகங்காதரன் (25-Nov-15, 8:50 am)
பார்வை : 530

மேலே