உண்மையான காரணம்
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது
அவள் கேட்டாள் ஒரு கேள்வி ..
"உன் ஸ்கூல்ல எப்பவுமே
ப்ளூ ஹவுஸ்தான் ..
அதிக கோப்பைகள் ஜெயிக்குமாமே ..
நீ எந்த ஹவுஸ் ..?.".
என்று!
மனசாட்சியை கொன்று ..
ப்ளூ ஹவுஸ் தான்
என சொன்னேன் ..
ஏனோ..
அதிலிருந்து இன்று வரை
எனக்கு நீல வண்ணமே
பிடித்ததாகி விட்டது..
ஏன் அப்படி ..என்று
யார் கேட்டாலும்...
அது அப்படித்தான்
என சொல்வதில்
எனக்கு ஏற்படுகிறது
ஒரு நிம்மதி..!