சென்ரியூக்கள் 20
தீபாவளி பட்டாசு சப்தம்
ஓவென்று அழும் குழந்தை
இறந்த பாட்டியை நினைத்து!
¦
அலாரம் வைத்துவிட்டு
நிம்மதியாகத் தூக்கம்
கூவும்முன் எழும் விவசாயி
¦
கண்ணில் தூசி
துடைத்தும் போகவில்லை
காதலி உருவம்
¦
ஆண்டு முழுவதும்
கார்த்திகைத் திருவிழா
மின்சாரமில்லா இரவுகள்
¦
நதிக்ரையில்
சந்தித்துக்கொண்டன
நீர்தேடி வந்த கொக்குகள்