தித்திக்கும் உப்புப் பொட்டலம்

உன் புதுக் கவிதைகளையெல்லாம்
தொகுத்து புத்தகம் வெளியிடப் போகிறாயா ?
வீண் வேலை ; பலசரக்குக் கடைக்குத்தான் போகும்
பொட்டலம் கட்ட என்று இடக்காகச் சொன்னான்

போகட்டுமே மளிகை கடையிலிருந்து உப்பு சுற்றி வந்தாலும்
உப்புப் பொட்டலத்திலும் என் கவிதை தித்திக்கும்
என் கவிதையுடன் சுற்றி வந்த உப்பும் தித்திக்கும்
பாலில் கலந்து பருகினால் பாலும் தித்திக்கும் என்றேன்

THIS IS TOO MUCH என்றான்

YOU ARE DIABATE என்றேன் நான்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Nov-15, 3:19 pm)
பார்வை : 97

மேலே