செருப்பு

செருப்பிற்கு ஒரு கவிதை
எழுதி பதிவு செய்தான் எழுத்தில்
பார்ப்பாரில்லை படிப்பார் இல்லை
சொடுக்குவார் இல்லை !

மனமுடைந்த கவிஞன்
எழுத்தை விட்டு ஒதுங்கி நின்றான் !
ஆனால்
வாரப் பத்திரிகையில் அதே செருப்பு
வெளியானது !

எனது செருப்பு சிறப்புப் பெற்றது அங்கே என்று
அதை இங்கே படத்துடன் பதிவு செய்தான் !

இங்குள்ள செருப்பும் அங்கே
சிறப்புப் பெறுகிறது
இதுதான் இந்த எழுத்தின் சிறப்பு
என்று கவி நண்பன் ஒருவன்
எழுதியிருந்தான் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Nov-15, 10:49 am)
Tanglish : SERUPPU
பார்வை : 105

மேலே