காற்றினிலே
காற்று பூவினைத் தொட்டால்
பூங்காற்று
காற்று தோட்டத்தில் வீசினால்
தென்றல்
காற்று சாளரத்தில் வருகை புரிந்தால்
இனிமை
காற்று கடலில் மீது ஆடினால்
அலை
காற்று புல்லாங் குழலில் நுழைந்து வந்தால்
இசை
காற்று அவள் குழலில் மிதந்து வந்தால்
அவளுக்கு அழகு
நமக்கு கவிதை !
~~~கல்பனா பாரதி~~~
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
