வாழ்வே ஜெயம்

எழுத நினைக்கிறேன்
கவிதையில் எண்ணற்ற
நினைவுகள்
மனதினில்
வேலைப் பளுவினால்
எண்ணக் கருத்துகள்
மறைந்து மறந்து போகின்றதே
நேரங்கள்
வெகுவாய் நகர்கின்றதே
வேக வேகமாய் நானும்
வேலைகள் என்னை விட
முன்னால் வேகமாய்
கங்கணம் கட்டிக் கொண்டு
போட்டி போட்டு செல்கிறதே
இது தான் வாழ்க்கை
இயந்திரமாய் சுழலுகின்றான் மனிதன்
இப்போதுதான் புரிகின்றது
மனிதனும் வாழ்கையும் போட்டி
கடைசியில் வாழ்க்கையே சுகம் ஜெயம்

எழுதியவர் : பாத்திமா மலர் (28-Nov-15, 10:04 pm)
Tanglish : vaazhve jeyam
பார்வை : 121

மேலே