‎ஒரு_சாமான்யனின்_நாட்குறிப்புகள்‬ - 2

வாழ்வைவிட சுவாரஸ்யமானது எதுவுமில்லை.

மனிதர்களில்தான் எத்தனைவிதமான கேரக்டர்கள் ! நேற்று ஒரு காரை சென்னையில் கொண்டு விட்டுவிட்டு பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒருநாளில் மட்டும் எத்தனை கேரக்டர்கள் ! கூட்டமில்லாத பஸ்ஸின் டிரைவர் கண்டக்டர், அவர்களுக்குள்ளான சம்பாஷனைகள், உடன் பயணிக்கும் பலவிதமான பயணிகள்.

திண்டிவனம் பக்கத்து கிராமமொன்றிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு பினாயில் விற்கச்செல்லும் நடுத்தரவயது மனிதர். மலேஷியாவிலிருந்து சென்னைவந்து தேவகோட்டைக்கு பயணித்துக்கொண்டிருக்கும் இளைஞர். ஒவ்வொரு நிறுத்தத்திலும் திண்பண்டம் விற்க ஏறியிறங்கும் மனிதர்கள், சிறிய கப் டீயை 15 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர். ஒருரூபாய் சில்லறைக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு வாங்கமறுத்ததற்கு முறைக்கும் வேறொரு கடைக்காரர்.

பினாயில் வியாபரியிடம் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. விவசாயத்தைப்பற்றி, நாட்டுநடப்பைப்பற்றி, அரசியல் அவலம் பற்றி, ஒரு கிராமத்து மனிதரின் இயல்பான யதார்த்தமான எளிமையுடன் கூடிய பார்வைகளும் வாழ்வைப்பற்றிய புரிதல்களும் அற்புதமான ஒன்று.

உற்று கவனித்தால் ஒரு கோடி கதைகள் கிடைக்கும் ஒவ்வொருவரிடமும், என்ன அவற்றில் பெரும்பாலான கதைகள் துயரத்தால் எழுதியிருப்பதுதான் வேதனை. மனிதர்களும் புத்தகங்கள் போலத்தான். கண்ணிருந்து வாசிக்கப்பழகினால் திகட்டவே திகட்டாது. எதையேனும் கற்றுக்கொள்ள சாத்தியமிருக்கிறது எல்லோரிடமுமே. அட வாழ்வென்பது வேறென்ன கற்றல்தானே !

Life is nothing but learning....

எழுதியவர் : பகிர்வு : செல்வமணி மூலம் : ம (29-Nov-15, 8:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 190

மேலே