மாற்று நிழல்

போதிக்கப்பட்ட வாழ்க்கை,
சார்ந்தும் பற்றியும் வாழச்சொன்னது,
எதையேனும் பற்றுதலாய் !
எனப்பட்டதால்,
ஆதியிலேயே மூளையின் கருவில்,
பொருத்தப்பட்டது அந்த யோசனை !
மனிதம் வளர்ந்தது !
மனிதன் நிமிர்ந்தான் !
தனியே திரிந்தான் !
களிநடம் புரிந்தான் !
என்றபோதும்,
நிழல் அலையாய் தொடர்ந்தது,
ஒரு வழிய நெருடல் !
தான் தனி தனக்கோர் நிழல் வேண்டும்,
என உக்கிரமாய் உள்ளூர எரிந்து !
தலைபட்டான் தனக்கான துணை வேண்டுமென !
அதற்கென்று ஒரு காதலையும் கொணர்ந்தான் !
இங்கேதான் !
துவங்கியது,
ஒரு உயிர் உரசும் உறவுச்சிக்கல் !
தனக்கானவரை தனித்து முடிவு செய்கிறான் !
அதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறான் !
அங்கே மற்ற ஒருவரின் சுயம்,
சுத்தமாய் அடித்து நொறுக்கப்படுவது உணராமல் !
உங்களால் வலுப்பட்ட உறவு !
கொஞ்சம்கொஞ்சமாய் பழுதடைய !
உன் எதிர்பார்ப்புகள் உரமாய் அமைகிறது !
பரப்பளவு நீளம் கொள்ளளவு நிறைத்தன்மை !
எல்லாம் இருமை கடந்து ஒருமையாகிறது இருவர்க்கும் !
நீந்தத்தெரிந்தும் தேம்பியழும் அவலம் அரங்கேறுகிறது !
துணை !!
மாற்றுசக்தி !
மனதின் யுக்தி !
நிழலின் பொருள் அடிமையல்ல !
அதனின் சாராம்சம் ஆறுதல் அல்ல !
உன்னைத்தெரிய அவர்பாடுபட்டால்,
உணர்ந்து வெளிச்சமிடத்துடி அவரது உலகுக்கும் !
இங்கே அர்ப்பணிப்புக்கு அளவுகோல் இல்லை !
அன்பிற்கு திறவுகோல் இல்லை !
உனது தீர்க்கமும் எதிர்பார்ப்பும்,
உன் துணைக்குமானதாய் துணிந்து இருக்கட்டும் !
நீ இரு மாற்று நிழலாய்,
உன் ஆளுமை அர்த்தமாய் அறியப்படும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Nov-15, 9:35 pm)
பார்வை : 67

மேலே