என்னை காணவில்லை
என்னை காணவில்லை உன்னை கண்ட நாள் முதல் ,
என்னையே நான் எண்திசையும் தேடினேன் காணவில்லை,
நண்பர்கள் என்னை தேட என் முகவரியை ,
வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்தேன் பலனில்லை ,
பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன் பதிலில்லை,
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஆதாரமில்லை,
உன்னால் தான் நான் தொலைந்தேன் என்று உன்னிடம் வந்தேன் ,
பிறகு தான் புரிந்தது உன்னால் தொலையவில்லை உன்னில் தொலைந்தேன் என்று!!