சென்னையில் ஓர் மழைக்காலம்
சென்னையில்
ஓர் மழைக்காலம்
""""""""""""""""""""""""""""""""""
லோ பேட்டரியை
லோ கரண்டில்
சார்ஜர் போட்டுக்கொண்டே
உனக்கு அனுப்பும்
மெசேஜ் இது
மொட்டைமாடியில்
உனதாடைகாயும் போதெல்லாம்
உனது அங்கம் நினைவில்வருகிறது
படகுப்போக்குவரத்து இருந்தும்
பார்க்கவராத என்னை,
நீர்வாரித் தூத்தியிருப்பாய்.
நீயும்
படுக்கையறைவரை
நீரிருந்தாலும்
படகு வாசல்வரைதானே
அன்பே
பசியோடிருக்காதேயடி என்
பைங்கிளியே
தண்ணீருக்குள்
நின்றுகொண்டு
மீன்குழம்பு வைக்க
எத்தனைபேருக்கு
கொடுத்துவைத்திருக்கும்.?
சிலின்டர்
மிதக்கும் முன்னே
சீக்கிரம் சமைத்துவிடு.
உன் வீட்டு
சன்னலே தெரியாதளவு
தண்ணீர் மூடினாலும்
சன்னலை நீ மூடியிருப்பாய்
என நான் நம்புகிறேன்.
நீச்சல் கற்றேனும்
நிச்சயம் சந்திக்கவருவேன் உன்னை.
நம்பிக்கையோடிரு.
நிலாகண்ணன்