- காத்திருக்கிறேன்
என் நிலவில் தென்றலாய் நீ!
----என் நினைவில் நின்றவள் நீ!
கண்ணைக் கண்டதால் கொண்டேன் காயம்!
----காதலும் கொண்டேன் இதென்ன மாயம்!
உன்னைத் தொடமுடியா இடத்தில் நான்!
----என்னை விட்டுச்செல்லும் காலத்தில் நீ!
தொல்லைக் கொடுக்க மனம் வரவில்லை உன்னை
----தொலைவிலிருந்து இரசிக்க நேரமுமில்லை!
நினைவில்லை! உன்னை நினைக்காத நாட்கள் - ஐயகோ!
----நினைவிலில்லை! நான் இன்னும் காதல் சொல்லவில்லை
என்று சொல்வேன் உன்னிடத்தில் தெரியவில்லை - ஆனால்
----எல்லாவுமாய் என்னிடத்தில் நீ!
மரத்தில் கனிந்த பழம் நீ! - என்
---மடியில் விழுமா? காலம் பதில் சொல்லும் - காத்திருக்கிறேன்