மோகனுக்கு வந்த போன் கால்
மோகன் தன் பையன் ஆனந்த்வுடன் விளையாடிக்கொண்டுஇருந்தான்
அப்போது மோகனின் செல்போன் அடிக்க இல்லைஇல்லை பாடத்தொடங்கியது
தாலியே தேவையில்ல நீதான் என் பொன்ஜாதி என
மோகன்: கண்ணம்மா அடியே என் பொன்ஜாதி போனை எடுமா
கண்ணம்மா: இந்தாங்க மாமா ஏதோ ஃபாரின் நம்பர்
மோகன்: ஃபாரினா கொடு ஹலோ சொல்லுங்க
எதிர்பக்கம்: ஹலோ ஹலோ
மோகன்: சொல்லுங்க கேக்குது யாரு
எதிர்பக்கம்: நான்தான்
மோகன்: நான்தான்னா யாரு
எதிர்பக்கம்: நான்தான் பூஜா
பூஜா: ஹலோ ,,,,,ஹலோ
மோகன்:
பூஜா: என்ன மறந்துடைய
மோகன்: இல்ல என்ன மறந்துட்டேன் ஒரு நிமிஷம் இரு வெளிய வரேன்
முப்பது நொடிக்குள்
மோகன்: ஹலோ பூஜா எங்க இருக்க
பூஜா: சிங்கப்பூர்ல
மோகன்: நல்ல இருக்கேல நீ நல்லதான் இருக்கனும்
அதுக்காக தானே இதுயெல்லாம்
பூஜா: ம்,,,,, இருக்கேன் நீ
மோகன்: இருக்கேன்
ஆமா என் நம்பர் எப்படி உனக்கு
பூஜா: fbல எடுத்தேன்
மோகன்: fb னா
பூஜா: facebook
மோகன்: ok ok
அதற்குள் மோகனின் பையன் ஆனந்த் ஒடிவந்து அப்பா வா விளையாடலாம் என கூப்பிட்டான்
மோகன்: டேய் அம்மாகிட்ட விளையாடுடா அப்பா ஐஞ்சுநிமிஷத்துல வரேன் போ
பூஜா: உன் பையனா
மோகன்: ஆமாம்
பூஜா:பேரு
மோகன்:ஆனந்த்
ஏய் உனக்கு பசங்க???
பூஜா:ம் ஒரு பையன்
மோகன்:பேரு
பூஜா:
மோகன்:ஹலோ இருக்கய
பூஜா: இருக்கேன் மோகன்
மோகன்: பேரு கேட்டேன்
பூஜா:சொல்றேன் மோகன்
மோகன்:சொல்லு
பூஜா: அதான் சொல்லிட்டேனே மோகன்
மோகன்:எப்ப
பூஜா:மோகன்னு சொன்னேனே மோகன்
சில வருடம் முன்
காதலன்: ஏய் நமக்கு ஆம்பள குழந்தை பொறந்தா என்ன பேரு வைக்கலாம்
காதலி: உன் பேருதான் வைக்கனும்
காதலன்:என் பேரா ஏன்
காதலி: அப்பதானே குழந்தையைதிட்டுர மாறி உன்னை ஜாடையா திட்டலாம் அதான்
காதலன்: அடிபாவி
சில வருடம் கழித்து
மோகன்: அப்பனா உன் பையனை நீ தீட்டவே மாட்ட எனக்கு தெரியும்
பூஜா: மனதுக்குள் சிரித்துக்கொண்டு ஆமாம் ஆமாம்