எல்லாம் அழகாய், உன்னாலே
பூவிழி ஓரம்
பூரண நிலவாய்
பூத்திருக்கும் முகமே,
மை விழி மாதும்
மயக்கம் கொண்டது
மன்னவன் உன்னில் தானே..
கைவிரல் எல்லாம்
கை பிடிக்க ஏங்கும்
காதல் நீதானே,
தேன் இதழ் இங்கே
தேடிடும் அமுதம்
தூயவன் உன்னில் தானே..
சந்தன தென்றல்
சிந்திடும் வாசம்
சிந்தை மயக்குவது போலே
கட்டிப் போட்டு
காதல் செய்யும்
கண்கள் உன்னில் தானே ..
கார்முகில் வானில்
கோடை மின்னல்
கோடாய் மின்னுவது போலே
வாழ்வின் இருளும்
வெளிச்சம் கண்டது
வல்லவன் உன்னால் தானே
வண்ணப் பூக்கள்
வாசம் பரப்பும்
வசந்தச் சோலை போலே
உந்தன் நினைவில்
உள்ளம் எங்கும்
ஊற்றாய் பெருகும் உவகை..