உயிரே என்னோடு

எனக்குத் தெரியும்
நீ விரும்புவது
என்னையல்ல
என் வரிகளை என்று
உனக்குத் தெரியுமா
உன்னை விரும்புவது
என் வரிகளல்ல
நான் தான் என்று
எனக்குத் தெரியும்
உன் இதயம்
உன்னிடம் இல்லை
என்னிடம் என்று
உனக்குத் தெரியுமா
என் இதயம்
என்னிடம் இல்லை
உன்னிடம் என்று
எனக்குத் தெரியும்
காற்று வீசுவது
உன் உயிர்
மூச்சுக்காக என்று
உனக்குத் தெரியுமா
என் உயிர் மூச்சுக் காற்றே
உனக்காக என்று