என் காதல்

என் காதல்
ஒரு கர்சீஃப் -
கைகளிலே வைத்துக்கொள்
தொலையாதிருக்க

என் காதல்
ஒரு தேசத்தின் எல்லைக் கோடு -
கண்காணித்துக் கொண்டே இரு
அந்நியர் புகாதிருக்க

என் காதல்
ஒரு ஷாம்ஃபைன் –
காத்திருந்து குடி
ருசி அதிகம்

என் காதல்
ஒரு இசைக் கருவி –
சுதி சேர்ப்பதும்
இசை வார்ப்பதும்
உன் பொறுப்பு

என் காதல்
ஒரு பூந்தொட்டி -
வரவேற்பறையில் இருந்தாலும்
விட்டத்தில் தொங்கினாலும்
பூத்துக் குலுங்குதல் என் கடமை

என் காதல்
ஒரு பாறாங்கல் –
தேவனை வடிப்பதும்
சாத்தானை எழுப்புவதும்
உனது கையில்

என் காதல்
ஒரு இந்திய அரசியல் கட்சி –
கருத்து வேறுபாடு
நம்பிக்கையின்மை
உட்புகைச்சல்
எது இருப்பினும்
கூட்டணியை மட்டும்
எப்போதும் விரும்பும்!

- ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)

எழுதியவர் : ப்ரணா (2-Dec-15, 8:36 am)
Tanglish : en kaadhal
பார்வை : 121

மேலே