நினைவலைகள்

தனிமையே எனது
தார்மீகச் சொத்து !
விற்க நினைத்தேன்
வாங்க ஆளில்லை!

ஆழ்கடலே என் மனம் !
அதில்
நினைவலைகள் ஓய்வதில்லை !!!!!!!

என் சுற்றம்
மரம் ,செடி ,கொடி
வயல்வெளி .
எவை என்னிடம்
எதையும் எதிர் பார்ப்பதில்லை !!!


நீ அமர்ந்த நாற்காலி
உன் நினைவை உணர்த்திடவே
தாபத்தினால்
காத்திருக்கும் வயது போன
உன்னழகு பெட்டகம் நான் .


என்னை சுற்றிலும்
உன் நினைவுகள்
என் உயிருக்குள் புகுந்து
உயிர் வலி தருதையா ..
நீ எப்ப வரப்போற ...


தூக்கம் மறந்த கண்கள்
ஏக்கம் அதிகமாகி
தும்பைப் பூ போல
என் தலைமுடியும் நரைத்து விட
மங்கிய கண்களால்
உன்னை நான் தேடுகிறேன் .


சென்னையில் வெள்ளம்
தெருவில்லாம் தண்ணீர் .
என் மனதெல்லாம் கண்ணீர் .
வெள்ளத்திலே மாட்டிக் கொண்டு
திரும்பி வீடு வர
முடியலையா ? ஏங்குது என் மனது .


தனிமையிலே
காத்திருக்கேன் . தயவுசெய்து
வாருமையா . உமக்காக
என் உயிரு உன்னை
பார்க்காம போகாது .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Dec-15, 9:37 am)
Tanglish : ninaivalaigal
பார்வை : 192

மேலே