வெற்றியும் தோல்வியும்
வெற்றி பெறுபவர்கள் எல்லோருமே
ஒரே மாதிரியான மனநிலையில் ..
மகிழ்ச்சி!
தோல்வி அடைபவர்கள்
அப்படி இல்லை..
ஒருவருக்கு.. விரக்தி..
இன்னொருவருக்கு.. கோபம்..
மற்றொருவருக்கு ..பொறாமை..
இப்படியாக..
எரிச்சல்..
ஏமாற்றம்..
உத்வேகம்..
முனைப்பு..
ஆர்வம்..
பழி வாங்கும் எண்ணம் ..
மந்த நிலை..
என்று இன்னும் பலப்பல ..
நேர்மறை..எதிர்மறை..
விளைவுகள் ஏற்படுத்தும்
தோல்விக்கு ..
அனுபவத்தை அள்ளித் தரும்
சக்தி அதிகம் என்பதால்..
நான் ..
தோல்விகளை..
வெறுப்பதில்லை!