கொட்டியது போதும் விட்டுவிடு
பருவ மழை ....
என்ற பெயரில்
சென்னையை
உருக்குளைத்தவளே !
உன் ..வரவை
ரமணனுக்கு மட்டும்
ரகசியமாய்
சொல்லிவிட்டாயோ?
வங்ககடலில்
வாரிவந்த நீரை
எங்கள் ...குடிசைக்குள்
கொட்டிவிட்டு
ஒரு கந்து வட்டி
காரனாய்
குடிசைக்குள் புகுந்து
அனைத்து பொருளையும்
அடித்து சென்றுவிட்டாய் !
என்ன தேவையென்று
எங்களை கேட்டிருந்தால்
எடுத்து கொடுத்திருப்போம்
புது குடுத்தனம்
போனவள்போல
பொறுக்கிக்கொண்டு
போய்விட்டாய் !
வேணாம் .....விட்டுவிடு ?
இன்னும் .....அவிழ்ப்பதற்கு
எங்களிடம் ....
ஆடைமட்டுமே
இருக்கிறது?...உன்னால்
ஒன்று மட்டும்
நடந்திருக்கிறது ......
ஆட்சிக்கு வந்த .....
நாள்முதலாய் உலகத்தை
சுற்றிவந்த .....
எங்கள் பிரதமரை
தமிழகத்திற்கு
வரவழைத்த பருவ மழைக்கு
நன்றி !