மன்னித்து அருள்வாய் மழையே

நீர் இன்றி அமையாது உலகு உண்மைதான்
நீ இன்றி அமையா தேசம் -உன்
நிலம் இன்றி நீ இல்லை......
மன்னித்து மறு பிறவி தந்திடு
எம் மானுட பிறவிக்கு..........

மண்ணில் மரங்கள் கண்ட கண்கள்
வேர்களின் பிடியை மறந்து
பிளந்து உன்னுடன் மிதப்பதை காண்கிறது
மறுபிறவி தந்திடு -எமை
மன்னித்திடு.........

மரணம் செவி ஓரம் கேட்டிட
மலைப்புடன் மறு கணம் நோக்கி
மறந்தும் இனி உன் எல்லை தாண்ட மாட்டோம்....
மன்னித்து எம் பிறவியை எமதாக்கு.....

ஆசையுடன் வளர்த்திட்ட
கோழியும், குஞ்சியும், ஆடும்
கோரி சென்றாய் - அவைகளின் ஓலம்
செவியை பிளக்கிறது.....
மன்னித்து மறுமலர்ச்சி கொடு.....

பச்சை வயல்களில் சேரை வீசி
பச்சிளம் குழந்தையின் ஒட்டிய வயறு....
போதும் இந்த பிறவி கொடுமை
மறந்து மனித்து இன்னுயிர் தந்திடு.....

நிற்க நேரம் இன்றி ஓடிய கால்கள்
நிர்கதியாய் மொட்டை மாடியில் தஞ்சம்
நிவாரணம் இன்றி வெளிறிய முகங்களுடன்
நித்திரை அடைந்து எமை மனித்திடு......

உன் கோப தீ எமை வாட்டியது போதும்
மழையே எம் கூக்குரல் கேட்டு
சபிக்காமல் மனித்து விடு..........

வஞ்சகர்கள் கையில் இருந்து
எமை சுத்தம் செய்திட எழுந்தாயோ!!! - இல்லை
மானுடன் செய்திட்ட பாவத்திற்கு
பழி தீர்த்திட வந்தாயோ!!! -இல்லை
எங்கள் அறியாமையை அகற்றிட
இனியேனும் உன்னை காப்பான்
என்கிற ஏக்கத்தில் விழுந்தாயோ!!!!
மானுடன் வீசிய கழிவுகளிலிருந்து
உன்னை சுத்தம் செய்ய ஓடுகிறாயோ - எதுவாயினும்
எங்களை மன்னித்து வாழவிடு......... எங்கள்
சிரம் வணங்கி கேட்கிறோம்
மறு வாழ்வு தந்திடு மழையே!!!!!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (3-Dec-15, 9:59 pm)
பார்வை : 164

மேலே