ஏன் பிறந்தாய் மழையே

மழையே
நெய்தல் நிலங்களுக்கு
சவத்துணியை நெய்யவோ
ஊருக்குள் நடந்து வருகிறாய் ?

நீ நகரங்களை தத்தெடுத்து
நீரால் நரகத்தை காட்டவோ
நகர்ந்து வருகிறாய் ?

ஏழைகள் கண்ணீரில் மிதந்தது
போதும் என்றா தண்ணீரில்
மிதக்கவைதாய் ?

வாழைமரம் சாய்த்தது
போதும் என்றா விவசாயிகளின்
வாழ்க்கைமரம் சாய்க்க வந்தாய் ?

மழை நீரே
நீர் செய்த பாதகம்
மக்கள் செய்கின்றனர்
கழுத்துவரை நீரில் சாதகம்

பள்ளத்தை அடைத்தாய்
பாலத்தை உடைத்தாய்
உன் பலத்தைக்காட்டி
மக்களுக்கிந்த கோலத்தைக் கொடுக்கவோ ?

சுட்டெரிக்கும் சூரியன்
சுவடு தெரியாமல்
சுற்றுவது எங்கே
சுதந்திரம் பெற்றானோ
விண்ணிலிருந்து ?

சென்னை போடா வெண்ணை
என்று கோபமூட்டியதோ விண்ணை ?

ரமணன் பணி ஓய்வுபெறும்
நேரம் வந்துவிட்டதோ
வருணன் பதவியேற்க
வருவதற்கு ?

பாலாறு செய்வதென்ன
கோளாறு
காவிரிகூட கைவிரித்துவிட்டது ..

கல்வீட்டுக்காரன்
மொட்டை மாடியில்
குடிசை செல்வீட்டுக்காரனை
படுக்கவைக்குமோ தெய்வம்
அதன் மடியில் ?
விடுவிக்குமோ தண்ணீரின் பிடியில் ?

இபோதுதான் தெரிகிறது
வருணனின் தலைநகரமும்
சென்னைதான் என்று

ஓட்டு போட்டோர் வீடுகள்
ஓட்டையாகிப் போனது
ஓட்டுகேட்ப்போர் கூடுகள்
ஓட்டம் கண்டுப் போனது எங்கே ?

ஏன் பிறந்தாய் மழையே ?
ஏழைக்கு செய்யாதே பிழையே ..

ஆறுகளை ஆழமாக்குவோம்
ஏரிகளைத் தூர்வாருவோம்
குளங்களை குணமாக்குவோம்
மழை நீரை சேமிப்போம் ...

எழுதியவர் : குமார் (3-Dec-15, 10:54 pm)
பார்வை : 157

மேலே