வெள்ளம்
வெள்ளம்
கூவம் நதிக்கரையில் என் குடிசை
இப்போது குதித்து ஒடும் வெள்ளத்தில்
நீந்துகிறது என் குடிசை
நான் கும்பிட்ட தெய்வங்கள் என் குடிசையில்
எல்லாம் சேர்ந்தே பயணிக்கிறது
மோட்சம் சேரும் பாதையில்
அரசு கிள்ளி அருளும் நிவாரணம்
அதுக்கும் அவசியம் குடும்ப அட்டை
அதுவும் குடி கொண்டது என் குடிசையிலே
தரையில் பயணித்தேன்
வானத்தில் பயணித்தேன்
இன்று தண்ணீரிலும் பயணிக்கிறேன்
நேற்றுவரை படகு மீனவனுக்கு
மட்டும் என்று எண்ணினேன்
நேரம் உணர்த்துகிறது
படகு பல தரப்புக்கும் என்று
நேற்றுவரை நாம் தூற்றிய அரசு ஊழியர்களின்
கரங்கள் இன்று நம்மை மீட்டுக்கும் கரங்கள்
ஊரெங்கும் தண்ணீர்
குடிக்க ஒரு சொட்டு தண்ணீரும் அரிதானது
இதுதான் தண்ணீரின் கோபமோ