எங்கே என்மனம் பயமின்றி தலைநிமிர்ந்து இருக்கிறதோ…
எங்கே என்மனம் பயமின்றி தலைநிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு சுதந்திரம் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய வீட்டுச் சுவர்களால்
துண்டுதுண்டாக உடைக்கப் படாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து
வருகின்றனவோ,
எங்கே அயர்வுறாத உழைப்பு
ஒழுங்குமுறையை நோக்கித் தன் கரங்களை நீட்டுகிறதோ,
எங்கே தூய காரண காரிய நீரோட்டமானது
பயங்கரமான இறந்த (தொலைந்த) பழக்கம் என்ற
மணற்பாலைவனத்திற்குள் தன் வழியைத்
தொலைத்து விடாமல் இருக்கிறதோ,
எங்கே உன்னால் மனத்தை முன்னோக்கி
என்றும் விரிவடையும் எண்ணத்தாலும், நடவடிக்கையாலும்,
சுதந்திர சுவர்க்கம் நோக்கி செலுத்தப்படுகிறதோ,
என் தந்தையே, என்நாடு விழித்தெழட்டும்!
ஆதாரம்: ரவீந்திரநாத் தாகூரின் Where the mind is without fear என்ற கவிதையின் தமிழாக்கம்.