சென்னை மழை - ஐக்கூ

சென்னை மழை வெள்ளம் குறித்து தொலைக்காட்சி செய்திகள் கண்ட பொழுது மனதில் உத்தித்த ஐக்கூத் துளிகள் !

குடங்குடமாய் இருந்தும்
குடிக்க முடியவில்லை
குவியும் மழைநீர் !

மழைக்கால மீட்பு
விடுமுறை கொண்டாடும் குழந்தைகளின்
காகிதக் கப்பல்கள் !

தனிமை நிரப்பிய இடத்தை
நிரப்பியது தண்ணீர்
தண்டவாளங்களுக்கு இடையில் !

அடித்துச் செல்லும் வெள்ளத்தின்
அழகாய் அமைந்தது
அமைதியான சுழல் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (2-Dec-15, 10:47 pm)
பார்வை : 185

மேலே