24 மணி நேரமும் துயிலாதது

கவி சினேகிதி ஜான்சி ராணியின் ஊடகம் பற்றிய கேள்வியில் சொன்ன
திருவிளையாடலில் சிவபெருமான் ஔவை உரையாடல் பாணியில்
பதில் :
சிவபெருமான் : ஔவையே ஊடகம் பற்றிய உன் எண்ணத்தை சொற்றமிழில்
பாடுக :
ஔவை : உன் தரிசனத்திற்கு வந்த என்னை இந்த தொலைக் காட்சி பற்றிப்
பாடச் சொல்வதா ? என்ன சோதனை . பாடுகிறேன்

ஒன்றானது உருவில் DD என்று உருவானது
இன்று பலவானது மல்டி சேனல் என்று பலவானது
திரைப் படமானது கிரிகெட் களமானது
அர்த்த ராத்திரியிலும் செய்தி சொல்லும் தளமானது
24 மணி நேரமும் துயிலாதது
இரவென்றும் பகலென்றும் இல்லாதது
தொலைக் காட்சி என்றே பெயர் போனது
தொல்லைகளுக்கே நிரந்தர இடமானது
சோம்பேறிகளின் சொர்க்க பூமியானது !

சிவபெருமான் : இதனால் நற்பயன் ஒன்றும் இல்லையா ஔவையே ?

ஔவை :நற்பயன் தருவது நமசிவாய எனும் நாமம் ஒன்றுதானே என் ஐயனே !
இந்தக் கிழவியிடம் கேட்டால் .......இதை மூடிவைத்தால் அதுதான் நற்பயன் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-15, 9:04 am)
பார்வை : 57

மேலே