புதுமை தரும் புத்துணர்ச்சி --- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புதுமைக்குப் புதுமைத் தருகின்ற
----- புத்துணர்ச்சி நமது மகிமையாம் .
பதுமைபோல் விளங்கும் பற்றுடனும்
---- பாசமுடன் புதுமை போற்றிடுவோம் .
மதுவுண்ணும் வண்டும் மயங்கியுமே
------ மலரினையும் நாடும் புதுமையாம் .
எதுவந்த போதும் நிற்காது
------ ஏற்றமுடன் புதுமை வரவேற்கும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Dec-15, 11:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே