எல்லாம் அவள் செயல்

உருட்டி முழிக்கும் விழிகள் வேண்டாம்
திருக்கி முருக்கிய மீசை வேண்டாம்
அச்சம் தரும் பற்கள் வேண்டாம்
காவல் செய்வேன் அரிவாள் வேண்டாம்
.
.
சிற்பியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்
எல்லைக் காக்கும் ஐய்யனார்
ஐய்யனாரையே கேட்டு விட்டேன்
அப்படியென்ன கெஞ்சலென்று.?
ம்ம்... அவர் கெஞ்சியதிலும் நியாயம் உள்ளதுதான்
ஆமாம் பின்னே..
"பயத்தில் பார்க்காமல் செல்கிறாளாம் பாவையவள்"

எழுதியவர் : மணி அமரன் (9-Dec-15, 12:50 pm)
Tanglish : ellam aval seyal
பார்வை : 121

மேலே