வெள்ளைக் காதலி

இரவு நேரத்து இருள் வானம் நான்,
அதில் ஒளிரும் இன்ப நிலா நீ!

நிலா ஒளிர இருள் வேண்டும்;
இருள் சிறக்க நிலா வேண்டும்!!
இரண்டும் சேர்ந்தால் அன்றோ அழகு?

இரவின்றி நிலவின் ஒளி இல்லை,
நிலவின்றி இரவுக்கு அழகில்லை !

என்னில் நீயும்,
உன்னில் நானும்,
சேர்ந்தே ஒளிர்வோம் எப்பொழுதும்!!

எழுதியவர் : நேதாஜி (9-Dec-15, 2:45 pm)
Tanglish : niram
பார்வை : 102

மேலே