உடைந்து போன வாழ்கையில் உன்னை தேடும் நான்

சருகான மலரில்
தேன் தேடும் வண்டுகளாய்,
தேய்ந்து போன நிலவில்
வெளிச்சம் தேடும் விட்டில் பூட்சியாய்,
இறந்து போன தாயிடம்
பால் குடிக்க துடிக்கும் குழந்தையாய் ,
உடைந்து போன வாழ்கையில்
உன்னை தேடும் நான்.

எழுதியவர் : சங்கீதா நிதுன் (10-Jun-11, 10:14 am)
பார்வை : 353

மேலே