ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

அறிகின்றன பறவைகள்
அறியவில்லை மனிதன்
கனமழை !

மதங்களை வென்றது
மனிதநேயம்
மழை !

ஆறவில்லை
வெள்ளத்தின் ரணங்கள்
வேண்டாம் அரசியல் !

வேண்டாம் விளையாட்டு
இனியாவது உணர்க
இயற்கையின் பலம் !

போதும் அறிவுரை
வேண்டும் நடைமுறை
இயற்கை நேசம் !

வீழ்வது தவறல்ல
எழாதது தவறு
எழுந்து நட !

வேண்டாம் வரிகள்
மூன்றுக்கு மேல்
ஹைக்கூ !

கூச்சலின்றி நடந்தது
பாராளுமன்றம்
கனவில் !

சொன்னவன் எங்கே ?
பத்துப் பொருத்தம்
மணமுறிவு !

பிறந்தவுடனும்
இறக்கும் தருவாயிலும்
பால் !

ஆண்களுக்கும் வேண்டும்
மணமானதற்கு அடையாளம்
கட்டுக தாலி !

ஓடி விளையாடவில்லை
அமர்ந்தே விளையாடியது
கணினியில் குழந்தை !

வாடிவிடும் குழந்தை
வேண்டாம்
வன்சொல் !

கர்வம் உண்டு
குரல் பற்றி
குயிலுக்கு !

கவலை இல்லை
நிறம் பற்றி
குயிலுக்கு !

யார் சுட்டது ?
வெள்ளையப்பம்
வானத்தில் !

அன்றே உரைத்தாள்
அணுவை
அவ்வை !

ரசிக்கமுடியவில்லை
நிலவை
பசி !

கவனம்
போலிகள் பெருகிவிட்டனர்
சாமியார்கள் !

மது உள்புக
மதி வெளியேறும்
வேண்டாம் மது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Dec-15, 11:33 pm)
பார்வை : 114

மேலே