பெருமழை - 01122015

ஆங்கொரு ஏழைக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
இங்கோ பாமரனுக்கும் வழி இல்லை.
பணக்காரனுக்கும் விதி இல்லை.
ஆற்றங்கரையோரம் நாகரீகம் வளர்ந்ததாய்
முன்னொருநாள் படித்ததுண்டு.
ஆனால் இங்கோ சேரி அகமே செழித்ததுமன்றி
தண்ணிர்நிலைகள் சிறுத்ததுண்டு.
சமுக செழிப்பிற்கு வழிகோலியர் வழிதோன்றல்கள்
சமுக பேரழிவிற்கும் பட்டா ஈந்த்தனரே.
ஊருக்கொரு குளமுண்டு பண்டை தமிழர் பேட்டையிலே
குளத்தையே ஊராக்கினர் இன்றைய திராவிடர் கோட்டையிலே.
விளைச்சல் வேலிகளை விலை பேசி
வகிர்ந்திட்ட வெற்று கருங்காலிகள்.
பாய்ச்சல் எடுத்தனரே பாயும்
மழை நீர் காணுங்கால்
சீறிய சீற்றத்தையும் பாய்ந்த ஏற்றத்தையும்
மீறிய அன்பு உணர்த்தி மானுடம் மிளிர்ந்ததே!
மதமாச்ச்சர்யம் உதிர்ந்து நீருடன் கரைந்ததே!
பேராச்சர்யம் உற்றனவே ஒருமத தேசங்கள்.
எதிலும் அரசியல்தாம் எம்தமிழர் தலைவிதியாம்.
இதிலும் விலக்கில்லை. எங்களுக்கோ விடிவில்லை.
மீட்பு நடவடிக்கையிலும் மீட்டெடுக்கும் வெறும் அரசியல்.
நிவாரணபணிகளிலும் நிர்வாணமாய் வெற்று அரசியல்.
நிலையான தீர்வுசொல்ல சத்தியமாய் தலைவனில்லை.
தரங்கெட்ட தேர்வுக்கு யாரை நொந்து என்ன சொல்ல?
பொறுத்தது போதும் பொங்கி எழு என்றாலும் - பொதுப்படையாய்
எடுத்து செல்ல அருந்தலைவன் இங்கில்லையே!

எழுதியவர் : து.கிருஷ்ணமுர்த்தி (10-Dec-15, 3:42 am)
பார்வை : 116

மேலே