அணைகள்

எனக்காக ...
சண்டையிட்டோர் எத்தனை
ஜாதி கலவரத்தில்
சமாதியானோர் எத்தனை
கட்சி பெயரைச் சொல்லி
களவாடியவர்கள் எத்தனை
அத்தனை பேருக்கும் சேர்த்து
அமைதியாக
தூங்கிக் கொண்டிருந்த நான்
இப்போது
அடை மழை என்ற பெயரில்
ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறேன்
எங்கே இன்று ....
சண்டையிடுங்கள் பார்ப்போம்
தண்ணீர் தரமுடியாது என்று
அவ்வளவு தான்
அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள்
என்றது அணைகள் ...!

எழுதியவர் : ஹிஷாலீ (10-Dec-15, 9:57 am)
பார்வை : 72

மேலே