நான் நீ நாம்

நான் உன்னவளானேன்..
நீ என்னவனானாய்....
என் தாய் ஊற்றிய பாலிலும்
தாரைவார்த்த நிகழ்விலும்..
நான் நீ நாமானோம்..
நீ கட்டிய மஞ்சள் நாணிலும்
நம் உறவு காட்டிய மங்கள வாழ்த்திலும்..
இனியென்ன..
நாதத்தின் கீதம் நம் காதில் கேட்கட்டும்..
புன்னகை மலர்கள்
வாசம் வீசட்டும்
நம் வாழ்வில் செடியோடு சேர்ந்து..

எழுதியவர் : தீபாகுமரேசன் (10-Dec-15, 1:10 pm)
Tanglish : naan nee naam
பார்வை : 946

மேலே