சில் வண்டாய் பயணிக்கும் அவர் வண்டி

சில் வண்டாய் பயணிக்கும் அவர் வண்டி!!
*****************************
இளசுகளின் ஆட்டோக்களில்
கலாட்டா செய் காளையரும்
அப்பப்பா என்ன குதூகலம்
இவர் வேகப் பயணங்களில்!!

பாடல் சிறுத் திசை பெருத்து
தூம் தோம் என்ற சத்தங்களும்
மீரிய அவர் சத்தங்களும்
வீதி எங்கும் கலேபரம்தான்!!

பொருக்க முடியா பெரிசுகளின்
எல் வெடிக்கும் வதனங்களும்
தானிழந்த இளமைக்காய் பெருமூச்சும்
இயலாமை தரும் அவர் ஏச்சும்!!

வீதிப் பயணிகளின் திட்டுக்களில்
சொட்டும் அவர் காதில் கேழாது
கைதட்டிச் சாரதிக்கு முறுக்கேற்றி
சில் வண்டாய் பயணிக்கும் அவர் வண்டி!!

எழுதியவர் : ஜவ்ஹர் (12-Dec-15, 1:35 pm)
பார்வை : 67

மேலே