திராவகப் பிரவாகம்

அந்தக் குப்பியின்
கழுத்து வரை
அடைக்கப் பட்டிருந்த
மதுவில்
உனது முத்தங்களை
நிரப்பியிருந்தாய்

அருந்திய
ஒவ்வொரு மிடறுகளிலும்
என் குரல்வளையை
இறுக்கும்
தாம்புகளைத் திரித்த
உன் நினைவுகளாகவே
இனித்தது

தொண்டைக் குழியில்
எரித்துக் கொண்டே
இறங்கிய மிடறுகள்
இரவுகளை உடுத்திய
உணது நிர்வாணமாய்
எனது விதிரப்புகளைப்
புதைத்த
உன்னுடனான
எனது புணர்வுந்துதலைப்
பொசுக்கப் போதுமான
திராவகத்தின்
வீரியத்துடனேயே
இருந்தது

நான் உன்னைத்
தோற்றதாக
எழுதப்படும்
ஒவ்வொரு வரிகளிலும்
உனது அந்தப்புரத்தில்
என் மீதான காமத்தீ
உனது
யோனிக் குழி வழியே
என்னை
எரியூட்டட்டும் .

எழுதியவர் : முகிலன் (12-Dec-15, 10:28 pm)
பார்வை : 82

மேலே