வரமே சாபமாக

கண்காணும் தெய்வம் நீயென்பதால் -
அன்னையே
வரமொன்று கேட்பேன் உன்னிடம்
இன்பதுன்பம் பிரித்தறியா உன்மடி
சொர்க்கத்திலே..
இப்பிறப்பின் இறுதித்தூக்கம்
நான்தூங்க வேண்டுமென்று !
உயிராய்ப் பெற்று உறவாய்
வளர்ந்தமடி
உயிர்போகும் இடமென்றால் உன்சாபம்
அதுவாகும்..
என்று என்மனம் இடிக்கிறதே...
இனிநான் என்ன செய்ய?
$ மூர்த்தி

எழுதியவர் : (14-Dec-15, 12:58 pm)
பார்வை : 111

மேலே