காதல் 5
ஊர்க் கோடியில்
ஒற்றைக் குடிசையாய்
என் இதயம்
ஆள் அரவமற்றுக்
கிடக்கிறதென்று
திறந்த வீட்டில்
ஏதோ நுழைவது போல்
அடிக்கடி
வந்து போகிறாய்
செல்லம் கொடுத்து
செல்லம் கொடுத்தே
உன்னைக் கெடுத்து வைத்திருக்கிறது
என் இதயம்
அதனால்தான் இப்படி ...
அப்படியும்
இப்படியும்
மூலை முடுக்கெல்லாம்
பார்வையால்
தீயாய் உரசாதே
பாவம்
இது ஏழைக் குடிசை
ஒலைக் குடிசை
பற்றிக் கொண்டால்
நீயா
வந்து அணைப்பாய் ?