இயற்கை

வீட்டிற்குள் வெள்ளம் ஏன் வந்தது நீர் தேங்கும் இடமது நீங்கள் தங்கினீர்கள் காட்டுக்குள் வீட்டை கட்டினீர்கள் மழைதரும் மரத்தை வெட்டினீர்கள் நிலத்தடி நீரையும் நீக்கினீர்கள் வானரங்கள் ஓடாமல் வாகனங்கள் ஓடின பறவைகள் சத்தம் பஸ் சத்தமானது நீரோடிய இடத்தில் தார் ஊற்றினீர்கள் தென்றல் காற்று தீக்காற்றானது பூமணம் புகைமணம் ஆனது இயற்கையை அழித்து செயற்கையை செலுத்தினீர்கள் இயற்கை உங்களை அழிக்கவில்லை எச்சரித்தது

எழுதியவர் : குட்டிகுரு (15-Dec-15, 9:09 am)
Tanglish : iyarkai
பார்வை : 444

மேலே