என்றும் என்றென்றும்
அத்தை பின்னி விட்ட ரெட்டைஜடை.
ரயில்வே தண்டவாள டிசம்பர் பூக்கள்.
என்னை பள்ளியில் இருந்து இட்டு வீடு சேர்க்கும் மாட்டுவண்டி.
பல வருடமாக மதிய உணவு
ஊட்டிய காமராஜர் .
புத்தகம் கொடுத்து உதவிய
புதிதாக சேர்ந்த புவியியல்
ஆசரியர்
பாரதியை காதலிக்க வைத்த
என் பள்ளி
என்றும் எழுந்திராத
திருவரங்கத்தான் திருக்கோயில்
நான் இடும் கோலத்தை
காணவே கோவிலை விட்டு
உலா வரும் உற்சவ மூர்த்தி
நான் கோவிலை வலம் வர
என்னை வலம் வந்த யாரோ ஒருவன்.
ஒரே ஒரு பார்வையில்
ஒட்டு மொத்தமாய் என்னை
கொள்ளையிட்ட என் கணவன்
எனக்கு கர்வம் கொடுத்த என்
குழந்தைகள்
என்றும் மறக்க முடியாதவை.
என்றும் என்றென்றும்..........