இளையராஜா பிறந்தநாள் ( உதயம் ) !
இன்னிசை மழையால்
பலகோடி இதயங்களை
கொள்ளை கொண்ட
இளையராஜாவே !
இதயவானில் உதயமான
வெண்நிலவே
ஏழுசுரங்களுக்கு
உயிர் கொடுத்த ஜிவனே !
உன்னால் இசைக்கு
உயிர் வந்ததா இல்லை
உந்தன் ஜிவன்
இசையால் வந்ததா
இசைக்கு ராஜா
உதயமாவதால்
முல்லை முத்தமிட்டதா இல்லை
முல்லை முத்தமிடுவதால்
முத்து உதயமானதா !
பண்ணைக்கு மட்டும்
ராஜா அல்ல
பல இதயங்களுக்கும்
ராஜா நீ
சின்னதாய்க்கு மட்டும்
ராஜா அல்ல
சிம்பொனிக்கும்
ராஜா நீ
உன் உதயதால்
எங்கள் இதயம் நனைகிறது
இசையால் .
இன்னும் பலசெல்வங்கள்
பெற்று பல்லாண்டுகால
வாழ்த்தும் இதயம்
M நாகராஜன்