முத்தங்களின் வேட்டையாளன்

என் காமத்தின்
முதல் புள்ளி
உன் குட்டியூண்டு
மச்சமென
தெரிந்ததில்லை
அந்த இரவு வரை..


இற்றைவரை
பகிர
இஷ்டமில்லாத‌
என் தேனீரை
பருக
பிரியமில்லை
நீ சுவைக்கும் முன்..


சோற்றில்
கல்லென்று
குறைகண்டதுண்டு
அம்மாவிடம்
உன் சமையலில்
கல் கண்டபோதே
கடைக்காரனை
திட்ட நேர்ந்தது..


நம்மில்
யார்
முந்திக்கொண்டாலும்
தோல்விகள்
கிடையாது..

ஈர விரலால்
மின்சார ஆழியை
அமுக்குகிறாய்
உன்னை தொட்டுவிட‌
கொஞ்சம் கசிகிறது
மின்சாரம்..

உன் வியர்வையின்
வாசத்தில்
தோற்பதில்
முதிலிடம் நீ
ஏற்றும்
ஊதுபத்தியே..

நீ இன்று
அழகாயிருக்கிறாய்
என்பதில்
கொஞ்சம் பொய்!
உனது பருவகால‌
புகைப்படங்களே
சான்று

எழுதியவர் : புலவூரான் ரிஷி (15-Dec-15, 11:33 pm)
பார்வை : 87

மேலே