முத்தங்களின் வேட்டையாளன் 2

தேடுதல்
பிடிக்கிறது
தொலைந்தது
நீயெனினும்
கிடைக்கப்போவது
நானென்பதால்


பிடிவாதக்காரியாய்
இரு
முத்தங்களில்
மட்டும்


திமிர்பிடித்தவளே
என்
கவிதைக்கு
சொந்தகாரி

எதற்கு
தொடங்கியதென்பது
நினைவிலில்லை
ஒரு துளி
கண்ணீரோடு
முடிந்த உன்
கோபம்


உன் இரத்தபெருக்கு
நாட்களில்
பெய்யும் மழை
அழுவதாகவே
தெரிகிறது
நீ நனையதவறியதில்

கிடைத்தபோதும்
பெருமூச்சிவிட‌
தூண்டிய‌
பரிசுப்பொருள்
நீ மட்டுமே

அதிகாலை தேனீர்
என தொடங்கும்
கவிதைகள்
எல்லாவற்றிலும்
உனது சுவை

பிடிச்சிருக்கா!
நீ அடிக்கடி
பாவித்த சொல்
எனினினும்
பிடிக்காமலில்லை
கேள்வி

நீ மட்டுமே
புரிந்துகொண்டாய்
என் எந்தெந்த
பார்வை
காமம்
காதலென்று

சலிப்புத்தான்
உன் கூடவே
இருந்தும்
அது
குறையாதிருப்பது

ஓர் வெள்ளை
முடி மீசைக்குள்
என் காதலுக்கு
ஒரு வயது

கொஞ்சம்
பருமனடைந்திருக்கிறாய்
கனம் தெரியவில்லை
தூக்கியது என்
காதலை

என்ன‌
கறுமமடா!
சூரியனுக்கும்
திருமணம் செய்து
வைய்யுங்களேன்

முதியோர்
இல்லத்தை
கடந்தபோது
நிகழ்ந்த_உன்
முகமாற்றத்தில்
நாமே நம்
குழந்தைகள்
என்பது மறந்திருந்தது
உனக்கு

பெரும் ரசிகனை
குட்டியூண்டு
கவிஞனாக்கி
நீ மட்டுமே
வாசகியானாய்..

எழுதியவர் : புலவூரான் ரிஷி (16-Dec-15, 12:51 am)
பார்வை : 105

மேலே