பக்தி --- தரவு கொச்சகக் கலிப்பா
பக்தியினால் வருகின்ற பரவசங்கள் நமக்கெல்லாம்
முக்தியினைத் தருகின்ற முதற்பொருளாம் செவிமெடுப்போம்.
சக்தியினை இயம்புகின்ற சமயங்கள் வரமாகி
யுக்தியினை உலகத்தில் யுகமாக்கி குடிபுகுமே !
இதனால்
பக்தியின் வழியே பாதையை அமைத்து
முக்தியைப் பெறுதல் முற்றிலும் முழுமை
சக்தியைத் தருதலைச் சமயம் சாற்ற
யுக்தியைத் தெளிந்துமே யுகத்தில்
வாழ்தல் பக்தியின் வழியது நலமே !
( நேரிசை ஆசிரியச் சுரிதகம் )