பெருமிதம்

மொழியினை விழியெனக் காப்பதில் தங்கள்
==மூச்சினை வைப்பவர் மீதினில், செல்லும்
வழியினில் கிடந்திடும் முற்களை நீக்கி
==வழிகளைத் தடுப்பவர் மீதினில் மற்றும்
கழிவுகள் அகற்றி துர்மணம் போக்கும்
==கடமையை புரிபவர் .இழிவெனக் கருதும்
தொழில்தனை ஏற்றிடும் அனைவரின் செயலிலும்
==துணிவுடன் பெருமிதம் கொள்வது சிறப்பு.

கடவுளை மறந்தவர் கடைநிலை யானவர்
==கண்களைத் திறப்பதில் இருப்பது. சொந்தம்
உடைமைகள் உரிமைகள் இழந்தவர் வாழ்வை
==உயர்வுற வைப்பதில் கிடைப்பது . கைகால்
திடமுடன் இருக்கையில் உழைத்தவர் நலிந்து
==திரிகையில் உதவியே மகிழ்வுறச் செய்யும்
கடமையில் பலன்தனை நோக்கிடா நெஞ்சம்
==கனிவதில் கிடைத்திடும் பெருமிதம் சிறப்பு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Dec-15, 1:54 am)
Tanglish : perumitham
பார்வை : 102

மேலே