உழைப்பு எனும் ஒற்றை நார் - கார்த்திக்

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்
=====விதி ஏன் என்னிடம் சவால் விடுகிறது
எதிர் சவாலை ஏற்கும் துணிச்சல்
=====ஏன் என்னிடம் தேய்ந்து இருக்கிறது ?
எனக்குள் உள்ள கங்குகளில்
=====ஏன் ஜுவாலை இல்லாமல் இருக்கிறது ?
கங்குகளில் இருந்து வரும் கரும்புகையில்
====ஏன் எனது கண்கள் கலங்கி நிற்கிறது ?
ஏன் இந்த பைத்தியகாரத்தனம் -இதயத்தில்
====ஏன் இந்த கோழைத்தனம் ?
மூளையில் உள்ள முதிர்ச்சித்தன்மை
====ஏன் இப்போது மூடாப்பு போடுகிறது ?
உண்மையில் எதனால் நிம்மதி விளையும்
===பணத்தாலா,பாசத்தாலா,அறிவாலா,தைரியத்தாலா?

கரங்களும் கால்களும் சீராக இருந்தும்
===ஏன் என் மனம் உழைக்க தயங்குகிறது ?
மொழியின் ஆர்வம் மதியில் இருந்தும்
====உளறல் ஏன் என் வாயில் நுழைகிறது ?
வாழ்கையின் ஆயிரம் வழிகள் இருந்தும்
====இடறல் என் என் நெஞ்சில் நிகழ்கிறது ?
சுதந்திரம் என்னை சுற்றி இருந்தும் -இதயம்
===அடிமை இயந்திரத்தில் ஏன் சுழன்று வருகிறது ?
உண்மை கப்பல் கடலில் காத்துகொண்டிருந்தும்-ஏன்
===காகித கப்பலை அடைய மனம் பிரயாசை கொள்கிறது ?
தத்துவ மூட்டை பல சிரசில் மிதந்தாலும் -பித்தனை
===போல் மனம் ஏன் பிதற்றல் கொள்கிறது ?

ஏற்றம் தரும் ஏணி கண்முன் தெரிந்தும் -எத்தணை
===போல் மனம் ஏன் ஏமாற்றி தொலைகிறது ?
பல வித்தக விதைகள் அறிவில் இருந்தும்
===முளைத்து பூப்பதை எது தடுக்கிறது ?
நல்லாசைகள் மனதில் அசைபோட்டிருந்தும் -எதார்த்தம்
===என்னை ஏன் சவைத்து துப்புகிறது ?
அவனியில் பலவற்றில் ஆர்வம் இருந்தும் -அலட்சியத்தில்
===மனம் ஏன் உழன்று கொண்டிருக்கிறது ?
சித்தனை போல வாழ நினைத்தாலும் -மோக
===பித்தனை போல மனம் ஏன் மோசம் செய்கிறது ?
தவசியாய் மாறும் தன்னார்வ திறனிருந்தும்-வேசித்தன
=== கற்பனையில் ஏன் மனம் வெந்து துடிக்கிறது ?
அறிவில் கேள்விகள் இத்தனை துளைத்தும்
===அறியாமையில் மனம் ஏன் சிக்கி தவிக்கிறது ?

என் கேள்விக்கு யாது பதில் ?
முற்றத்தில் அமர்ந்து
முகிலிடம் கேட்டேன்
முகில் சொன்னது என்னிடம்
கடமையை செய்
காற்றுக்கு தக்க வளைந்து கொடு
காற்றுள்ள போதே தூற்ற விடு !!!

பிரிந்தால்தான் சில சமயம்
ஒற்றுமை வலுபெறும்
இரவு பகல் பாராதே
உலகம் ஒன்றுதான்
உணர்ந்து செல் !!!
வாழ்க்கை ஒன்றும் நிலையல்ல
பயணத்தால் மட்டும் பயனல்ல !!!

வட்டமிடும் கழுகையும்
கபடமில்லா புறாவையும்
அடையாளம் காண கற்றுக்கொள்
உழைப்பு எனும் ஒற்றை நாரால்
கதிரோடு கதிரவனையும்
மறைக்கலாம் ஏற்றுக்கொள் !!!
ரசித்த இடத்தில நின்றுவிடாதே
ரசிக்க பலவுண்டு மறந்துவிடாதே !!!


--------------------xxxxxxxxxxxxxxxxxxxx--------------------xxxxxxxxxxxxxxxxxxx------------------
என்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் -திருநெல்வேலி (16-Dec-15, 12:37 pm)
பார்வை : 366

மேலே