நிறமாறிய தேவதைகள்

நிறமாறிய தேவதைகள் :

வெள்ளை நிற தேவதைகள் சற்றும் நிறமாறாத காலம்;
அவற்றின் காதுகள் அடைபட்டிருக்கலாம்l
வாய்கள் மௌன மொழி பேசியிருக்கலாம்;
வெள்ளை நிறம் கறைபடும் என தெரியாதிருக்கலாம் ;

இப்போதெல்லாம் அதன் அவசியம்
இருப்பதில்லை ;
தேவதைகள் இப்போது வலுப்பெற்று
விட்டென ;
நிறங்கள் அவைகளுக்கு ஒரு பொருட்டல்ல

பூமிக்கு வந்த பின்பு பச்சோந்தியை
கணாவில்லையாம்
மனிதர்களை தான் கண்டனவாம்

தேவதைகள் புரிந்து கொண்டன
நிறம் மாறும் பச்சோந்தியை விட
குணம் மாறும் மனிதன் ஆபத்தானவன் என்று

தேவதைகளும் இப்போது வெண்மையை விட்டு விட்டு நிறமாற தொடங்கிவிட்டன
விட்டு விட்டு

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (17-Dec-15, 2:48 pm)
பார்வை : 89

மேலே