மாம்பழக்காரி

அம்மா மாம்பழம் வாங்கலையோ மாம்பழம் !
அம்மா மாம்பழம் வாங்கலையோ மாம்பழம் !
மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம் !
மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம்- மாம்பழம் !


அம்மா இது - முந்தாநாளு பழுத்த மாம்பழம்
அய்யா இது – நேத்துதான் பறித்த மாம்பழம்
இன்னிக்குதான் சந்தைக்கு வந்த மாம்பழம்
அண்ணன் – அண்ணிக்கு பிடித்த மாம்பழம்

பண்ணையிலே விளைச்ச மாம்பழம்
சென்னையிலே விக்கும் மாம்பழம்
திண்ணையிலே குவிச்ச மாம்பழம்
தொன்னையிலே வாங்கும் மாம்பழம்

பல ரகத்தில் கிடைக்கும் மாம்பழம்
பழ ரசத்தில் அசத்தும் மாம்பழம்
பட்டிக்காட்டில் முளைக்கும் மாம்பழம்
பிளைட்டில், ஃபாரீனுக்கு பறக்கும் மாம்பழம் !

சித்திரையில் சீரெடுக்கும் மாம்பழம்
ஆடியிலே ஆள்பறக்கும் மாம்பழம்
சீர்வரிசையில் முந்தி நிற்கும் மாம்பழம்
சீமந்தப் பெண்ணுக்கு வாந்தி நிறுத்தும் மாம்பழம்

முக்கனியில் முதலிடம் மாம்பழம்
முத்தான சத்துணவு மாம்பழம் !
அக்கரையா வாங்கிச்செல்லும் மாம்பழம்
மக்கள் வக்கனையா உண்டு மகிழும் மாம்பழம் !

முன்கோபி முருகனுக்கு - ஒளவைப் பாட்டி
ஞானம் தந்த மாம்பழம்!
பட்டாபி இராமனுக்கு - சீதா பிராட்டி
தானம் தந்த மாம்பழம் !

சீரடி வாசனுக்கு ரொம்பப் பிடித்த மாம்பழம் – அவர்
மார்வாடி தாமுவுக்கு பிள்ளை வரம் தந்த மாம்பழம் !
தர்மபுரி சுற்றுவட்ட விவசாயிகளின் ஜீவாதாரம் இந்த மாம்பழம் !
சேலம் மாநகர் செழிப்புக்கு முக்கிய காரணகர்த்தா இந்த மாம்பழம் !

மல்கோவா - மாம்பழம்; எல்லோர் மனம் மகிழும் மாம்பழம் !
அல்போன்சா - மாம்பழம்; ஆளைக்கொள்ளையிடும் மாம்பழம் !
கிளிமூக்கு - மாம்பழம் காதலியை கிரங்கடிக்கும் மாம்பழம் !
பங்குணப்பள்ளி - மாம்பழம்; பங்காளி வம்புத்தீர்க்கும் மாம்பழம் !

ருமானி - மாம்பழம்- ஒரே சீரான மாம்பழம்;
விமானப் பணிப்பெண்ணாய் குனிகின்ற மாம்பழம்
திருகுணி - மாம்பழம்; திருவேங்கடான் மாம்பழம்
திருமதிகள் விரும்பிவுண்ணும் தரமான மாம்பழம்

செந்தூரன் - மாம்பழம் செக்கச்சிவந்த மாம்பழம்
வந்தாரை கவர்ந்திழுக்கும் நட்சத்திர மாம்பழம் !
மல்லிகா - மாம்பழம் அழகில் ஆரணங்கு மாம்பழம்
நெல்லிக்கா குணம் கொண்ட நோய் எதிர்ப்பு மாம்பழம்

ராஸ்புரி - மாம்பழம் ராசியான மாம்பழம்
ராஜாக்கள் உலாவரும் ராஜஸ்த்தானி மாம்பழம்
தாசரி - மாம்பழம் தரமான மாம்பழம்
ஆச்சாரி ராகவேந்தர் வரம்பெற்ற மாம்பழம்

பாதாமி - மாம்பழம் பழங்கால மாம்பழம்
ஆதாம் ஏவாள் காதலுக்கு தூதுப்போன மாம்பழம்
கேசர் - மாம்பழம் சங்ககால மாம்பழம்
வாசன், வாசுகிக்கு காம கிக்கு-ஏத்தும் மாம்பழம்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (18-Dec-15, 7:53 am)
பார்வை : 977

மேலே