தாயாக நீ

தங்கை நீயல்ல என் தாய்
பாச மலராக நிதமும்
நெஞ்சில் பூக்கின்றாய்
உன்னை காக்கும் நினைவே
நான் செய்த மகா தவம்
இவ்வுலகில் நான் கண்ட
தேடக் கிடைக்காத பொக்கிஷம் நீ
உன்னை காண்பவர் எவரும்
பாசத்துடன் ஏக்கத்துடன் ,
நான் நானாக இல்லையே
தங்கையே / நீயாக நானடி ,
நம்மைப் போல அண்ணன் தங்கை
பிறக்க வேண்டும் வாழ வேண்டும்
பாசம் ஒரு தாயாகும்
அதுவே ஆணி வேராகும்
பொறாமை கொள்ள யாருமில்லை
போற்றுதற்கும் வாழ்த்துதற்கும்
எண்ணற்ற மனங்களுண்டு
எனக்கு என நான் வாழ
பிறிதொரு வாழ்கை வேண்டாம்
உன் வாழ்வில் நான் காணும்
சிறப்பு ஒன்றே சுகமாகும் வரமாகும்,
தங்கையே நீ என் தாயம்மா
உன் பிள்ளை என்னைப் பார்த்து
மாமா என்றழைத்தால் போதும்
என் நெஞ்சம் எல்லாம்
நிறையும் அம்மா
உன் அண்ணன் உன்னை
வளர்த்த பயன் பெற்றிடுவேன்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிடுவேன்
அண்ணனாக நான் இல்லை
உன் பிள்ளை நானம்மா.

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Dec-15, 5:04 am)
Tanglish : thaayaaga nee
பார்வை : 100

மேலே