நேரும் நிறையும்தான்

இலக்கை இலகாக்கி
வெல்வதெல்லம் வெற்றியல்ல
குறிக்கோளை குன்றாக்கி
முயன்றாலே தோல்வியில்லை
வெற்றிக்கான சூத்திரம்
வென்றவர்களின் அனுபவமே
அவ்வனுபவத்தை பயின்று
உன் அனுபவத்தை பாடமாக்கு
தோல்வியின் நிலை கண்டு
கழிவிரக்கம் கொள்ளாதே
காரணம் கண்டு
காரணியை களைந்து விடு
என்னாலும் முடியும் என
தன்னாற்றல் உயர்த்திவைத்து
என்நாளும் எனதென்று
இறுதிவரை போராடு
ஆயிரம் மைல் தொலைவெனினும்
ஆரம்பம் ஓரடியே
துணிந்து இறங்கிவிட்டால்
இறக்கம்கூட ஏற்றமாகும்
இடையூறு கண்டிடினும்
மனபோக்கை வலிமையாக்கி
மனநிறைவை தாமதித்து
வெற்றியை முழுமையாக்கு
வாக்கின் நேர்மறையே
வாழ்வின் நிறைமறை
தமிழ் சீரின் வாய்பாடே
நேரும் நிரை(றை)யும்தான்..